Monday, 29 April 2019

A3. புவனா ஒரு கேள்விக்குறி!

புவனா 29வயது. சென்னை அய்யனாவரத்திளிருந்து, கீழ்பாக்கத்திஎங்து வீகு த னது ஸ்கூட்டியில் வந்து சமையல் வேலை செய்துவிட்டு, பள்ளியில் படிக்கும் தனதுபையனை பள்ளியிலிருந்து தனது வீட்டிற்கு ஸ்கூட்டியில் அசழைத்து செல்பவர்.

இன்று 29-04-2019 காலை வழக்கம்போல தனது ஸ்கூட்டியில் எங்கள் வீட்டிற்கு வரும்போது நியூ ஆவடி ரோடு வாட்டர் ஒர்க்ஸ் அருகில், போக்குவரத்து ஆய்வாளர் சோதனையில் .. வண்டி ஆவணம் மற்றும் ஓட்டுனர் உரிமம் கேட்டுள்ளார்.

எதுவும் இல்லாதநிலையில், அபராதம் விதிக்க பணம் கேட்டுள்ளார் ஆய்வாளர். தனது சுருக்குப்பையில் பத்து ரூபாய் மட்டுமே இருப்பதை புவனா காண்பித்தார்.

புவனாவின் ஏழ்மைநிலை பார்த்து, அவருக்கு தகுந்த அறிவுரை கூறி, எச்சரித்து, தனது கைப்பணம் நூறு ரூபாய் புவனாவிற்கு கொடுத்து அனுப்பிவைத்தார்.

இன்று எங்களது வீட்டிற்கு தாமதமாக வந்த புவனா இதை கூறியதும்...மெய்சிலிர்த்து போனோம். மனிதம் இன்னும் இருக்கிறது!

1 comment: