Thursday, 2 May 2019

A4. டாக்டர் அகஸ்டஸ் - ஒரு கடிதம்


From: Saravanabhava G <bhava1948@gmail.com>Date: Thu, Apr 18, 2019, 3:05 PMSubject: Change of Life Style...!To: Dr.(Capt) Augustus Dodd, MS.,MBA 


ப்பிரியமானவரே, 


வணக்கம். சென்ற 2018ஆகஸ்ட் மாதம் வரை நானும் என் துணைவியும் கவலையற்ற வானம்பாடிகளாக 

சுற்றித் திரிந்தோம். அதற்குப்பின் இன்றுவரை எனது கேமரா முடங்கிவிட்டது. தொடர் பயணங்களும் 

தடைபட்டுவிட்டது. மருத்துவ சிகிச்சைக்காக மதுரையைவிட்டு சென்னையில் தங்கியுள்ளோம்.

 இன்றுவரை அப்போலோ மருத்துவமனை தொடர்பில் உள்ளோம். வருகிற2019 ஆகஸ்ட் 6ம் தேதி 

மீண்டும் அப்போலோ மருத்துவமனைக்கு செல்லவேண்டும். 

27-07-2018 அன்று தங்களிடம் அழைத்துவந்து மருத்துவ சோதனைக்குப்பின், தங்கள் அறிவுரைப்படி 


30-07-2018 அன்று மீனாக்ஷி மிஷன் மருத்துவ மனையில், டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி அவர்களை

 சந்தித்து, சோதனைக்குப்பின் அவர் அறிவுரைப்படி 


07-08-2018 அன்று சென்னை அப்போலோ மருத்துவ மனையில் டாக்டர் சுரேந்திரன் அவர்களின்

 கண்காணிப்பில் தங்கி..


08-08-2018 அன்று அங்கு விப்பிள் சர்ஜரி செய்து ..


21-08-2018 அன்று கிரீம்ஸ்ரோடு அப்போலோ மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோம் 

 டாக்டர் சுரேந்திரன் அவர்கள் அறிவுரைப்படி 

12-09-2018 முதல் 02-01-2019 முடிய சென்னை, அப்போலோ கேன்சர் இன்டிடியூடில் 

டாக்டர் ராஜா அவர்களால் ஹீமொதேரபி சிகிச்சை அளிக்கப்பட்டு, 

02-04-2019 அன்று CT Scan Whole Abdomen with Contrast உடன் மீண்டும் 

டாக்டர் ராஜா அவர்களை சந்தித்தோம். அவர் ஆய்வு செய்து ஓகே என்று கூறி, மாத்திரை 

கொடுத்துள்ளார். மீண்டும் ...

06-08-2019 அன்று  லேப் டெஸ்ட் எடுத்து வரும்படி கூறியுள்ளார்.

விப்பிள் சர்ஜரி முடிந்தநாள் முதல் இன்றுவரை வயிற்றில் லேசாக வலியுள்ளது. வலி மாத்திரை 

எதுவும் சாப்பிடவேண்டாம்..சிறிதுநாளில் சரியாகிவிடும் என்று டாக்டர் சுரேந்திரன் கூறியுள்ளார். 

டாக்டர் அகஸ்டஸ் டாட்  அவர்களிடம் பெசனும்போல் இருக்கு என்று சியாமளா அவ்வப்போது கூறியதால்

 அவரது அலைபேசி 8220406841 ல் தங்கள் ஓய்வுநேரத்தில் எப்போதாவது பேசினால் எங்களுக்க

மிகக் ஆறுதலாக இருக்கும். 

பிரியமுடன்,
சரவணபவா 







Monday, 29 April 2019

A3. புவனா ஒரு கேள்விக்குறி!

புவனா 29வயது. சென்னை அய்யனாவரத்திளிருந்து, கீழ்பாக்கத்திஎங்து வீகு த னது ஸ்கூட்டியில் வந்து சமையல் வேலை செய்துவிட்டு, பள்ளியில் படிக்கும் தனதுபையனை பள்ளியிலிருந்து தனது வீட்டிற்கு ஸ்கூட்டியில் அசழைத்து செல்பவர்.

இன்று 29-04-2019 காலை வழக்கம்போல தனது ஸ்கூட்டியில் எங்கள் வீட்டிற்கு வரும்போது நியூ ஆவடி ரோடு வாட்டர் ஒர்க்ஸ் அருகில், போக்குவரத்து ஆய்வாளர் சோதனையில் .. வண்டி ஆவணம் மற்றும் ஓட்டுனர் உரிமம் கேட்டுள்ளார்.

எதுவும் இல்லாதநிலையில், அபராதம் விதிக்க பணம் கேட்டுள்ளார் ஆய்வாளர். தனது சுருக்குப்பையில் பத்து ரூபாய் மட்டுமே இருப்பதை புவனா காண்பித்தார்.

புவனாவின் ஏழ்மைநிலை பார்த்து, அவருக்கு தகுந்த அறிவுரை கூறி, எச்சரித்து, தனது கைப்பணம் நூறு ரூபாய் புவனாவிற்கு கொடுத்து அனுப்பிவைத்தார்.

இன்று எங்களது வீட்டிற்கு தாமதமாக வந்த புவனா இதை கூறியதும்...மெய்சிலிர்த்து போனோம். மனிதம் இன்னும் இருக்கிறது!