குடி நோயாளி
என்னால் மாற்ற இயலாததை மனப்பூர்ணமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம்.
.
.
என்னால் மாற்றக்கூடியதை, மாற்றுவதற்கு தேவையான சக்தி..
மாற்றக்கூடியது எது?, மாற்ற இயலாதது எது? என்பதை பாகுபடுத்தி அறிவதற்கு தேவையான அறிவாற்றல்
”
”
இவைகள் ஆரம்ப காலத்தில் என்னிடம் இல்லை. என் இளமை பருவத்தை, என் குடும்பத்தை, இதுவரை
என்வாழ்வில் நடந்துவிட்ட நிகழ்சிகளை எண்னி வருத்தபடுவதாலோ, கோவபடுவதாலோ
பிரயொஜனமில்லை. என்வாழ்வில் மாற்றகூடியவை, சரிசெய்யக்கூடியவை நிறைய இருக்கின்றன என்பதை
புரிந்துகொண்டு, என் சிந்தனையையும், நடத்தையையும் மாற்றிக்கொண்டேன்.

மகிழ்சி, தூக்கம், தைரியம், சுதந்திரம், பிரச்சினைகளை மறத்தல், மற்றவர்களுடன் நன்றாக பழகமுடியும்,
நன்றாக வாழலாம்… என்றுதான் குடித்தேன். பலமுறை, சிலதினங்களுக்குத் தொடர்ந்து குடிக்காமல்
இருந்திருக்கிறேன். ஆனால் மறுபடியும் குடிக்க ஆரம்பித்துவிடுவேன். நான் ஏன் குடிக்கிறேன் என்ற
கேள்விக்கு சுலபமாக காரணம் காட்டினேன்… குடும்பத்தினரின் அளவிற்கு மீறிய கண்டிப்பு, வேலைப்பளு
,மனஅழுத்தம், அகசூல்நிலை, புறசூல்நிலை
….

குடியிலிருந்து மீண்டுவர மற்றவரை குறை கூறாமல் தெளிவுடன் சிந்திக்கும் மனப்பக்குவம்
தேவைபடுகிறது. பிரச்சினைகளை சமாளிக்க முயலும் மனிதனுக்கு ஆதரவு கொடுக்க ஒரு சக்தி தேவை.
.குடித்துக்கொண்டிருக்கும் நாட்களில் மற்றவர் சொல்லாலும், செயலாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு, அவற்றை
காரணம் காட்டி மேலும் குடிப்பதை தவிற்க வேண்டும். தனக்கு பயன்படக்கூடிய நல்லவைகளை மட்டும்
ஏற்றுக்கொண்டு தன்வாழ்க்கையை சீராக அமைக்க பாடுபடவேண்டும். என்கோபம் நியாயம் என்று
தோன்றியபோதெல்லாம் யார்மேல் கோபமோ அவரிடம் என்கோபத்திற்கான காரணத்தை தெளிவாக
கூறினேன். இவ்வாறு நிதானமாக செயல்பட ஆரம்பித்தபோது எனக்கும் மற்றவர்கும் இடையே உள்ள உறவு
பலப்பட ஆரம்பித்தது. அதன்விளைவாக எனக்கும் மனஅமைதி கிடைத்தது.

கடந்தகால சம்பவங்களையும், ஏமாற்றங்களையும் நினைத்து நான் வருந்துவதில்லை. அவை
இறந்துவிட்டன. அவற்றை பற்றி யோசித்துக்கொண்டிருப்பதில் பயன் ஏதுமில்லை. தேவையில்லாத
ஆர்வத்துடன் எதிர்காலத்தையும் திட்டமிடுவதில்லை. எதிர்காலம் முடிவில்லாத இருட்டான
ஒற்றையடிபாதை…அதுபற்றி நினைக்கும்போதே பயமும் வேதனையும் தாக்கும். அதைபற்றி கவலைபடாமல்
அதற்கு பதிலாக இன்று ஒருநாள் வாழ்க்கையை நன்றாக திட்டமிட்டு சீராக நடத்துகிறேன் இன்றய
பொழுதை நன்றாக செலவிடுவதன்மூலம் எதிர்காலத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொண்டேன்.
இன்றயபொழுது எனக்கு சொந்தம். அதை நான் நல்ல முறையில் பயன்படுத்துவதை யாராலும் தடுக்க
முடியாது. தனிமை உணர்ச்சி அகன்று, வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு, ஒவ்வொரு செயலிலும்
ஆர்வமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டு என்வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது

நான் பிறந்தது 25-8-1948 அன்று மதுரையி.ல். 25-8-1972 அன்று நான் எடுத்த அந்த மதுக்கோப்பையை 35
ஆண்டுகளுக்கு பிறகு 2-7-2008 அன்று தூக்கிஎறிந்தேன்.! அன்றுதான் நான் சென்னை-600020, இந்திராநகர்
நான்காவது பிரதானசாலை, டிடிகே மருத்துவமணை, ஆராய்சி நிறுவனம் சென்றேன் அங்கு எனது பதிவு
எண்: 1178/08 எனது கவுன்சிலர் திருமதி.ஜாக்குலின். இயக்குனர் டாக்டர் சாந்தி அம்மா! அம்மாவை
மறக்கமுடியுமா? அங்கு 20 நாட்கள் உள்நோயாளியாக அனுமதிக்கபட்டு சிகிசை பெற்று வீடுதிரும்பி,
அதன்பிறகு 2 வருடங்கள் வீட்டிலேயே தொடர்ந்து மாத்திரைகள் எடுத்து முடித்துவிட்டு தற்போதுவரை
நானும் என்குடும்பத்தாரும் மிக்க மகிழ்சியுடன் இருக்கிறோம். தற்போது குடிநோயாளிகளுக்கெல்லாம்
உதவி செய்யக்கூடிய தைரியமும் திறனும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நான் நன்றி சொல்வேன் அந்த சாந்தி
அம்மாவிற்கு!.

பி.கு: குடிநோயாளியிடமும் அவரது குடும்பத்தினருடனும் அக்கரையுள்ளவர்கள் யார்வேண்டுமானாலும்,
சென்னையிலுள்ள டிடிகே மருத்துவமணைக்கு தொலைபேசி 24918461/24912948

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
.. .
.. .
-சரவணபவா